Saturday, 8 September 2012

விஜயுடன் இணையும் சமந்தா-அதிரடி தகவல்

ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன.
அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் இணையும் புதிய படம்.
இந்தப் படத்துக்கான பூர்வாங்க வேலைகளில் இயக்குநர் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
படத்தின் நாயகியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஜய் விரும்பியதால், அவரது கால்ஷீட்டுக்காக அணுகியுள்ளனர்.
சமந்தா இப்போது புதிதாக இரு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளதால், அதற்கேற்ப தேதியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளாராம்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், “பெரிய இயக்குநர்களின் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் அந்த முடிவு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் அதற்கு இணையான வாய்ப்புகள் வந்துள்ளன,” என்றார்.

No comments:

Post a Comment