Monday, 17 September 2012

கணவரை விவாகரத்து செய்கிறார் யுக்தா முகி!

தன்னைத் தாக்கியதாக கணவன் மீது புகார் கூறிய பிரபல இந்தி நடிகை யுக்தா முகி, விவாகரத்துக்குதயாராகிறார். இன்று அவர் விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.
1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் யுக்தா முகி. தமிழில் ‘பூவெல்லாம் உன் வாசனம்’ படத்தில் யுக்தா முகி யுக்தா முகி…என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர்.
இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கை, திடீரென சிக்கலுக்குள்ளானது.
கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை போலீசில் சில தினங்களுக்கு முன் புகாரில் தெரிவித்திருந்தார். இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர்.
இப்போது கணவரிடமிருந்து முழுமையாகப் பிரிந்துவிட யுக்தாமுகி முடிவு செய்துள்ளார். முறைப்படி விவாகரத்து பெற இன்றோ நாளையோ மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment