Thursday, 20 September 2012

“தெய்வத்திருமகள்” சாராவின் அடுத்த படம் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’



சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தை இருமுறை தொடங்கி இருமுறையும் கைவிட்டார் இயக்குனர் கௌதம். இப்போது ‘சென்னையில் ஒரு நள்ளிரவு’ என தலைப்பிட்டு படத்தைதொட‌ங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகனாக ‘மைனா’ படத்தில் நடித்த விதார்த் நடிக்கிறார். அவருடன் மலையாள நடிகர் அனூப்-பும் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் ஹைலைட்டாக ‘தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த சாரா நடிக்கிறார்.
‘தெய்வத்திருமகள்’ படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய குழந்தை நட்சத்திரம் சாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தெய்வத்திருமகளு’க்குப் பிறகு சாராவுக்கு கிடைத்திருக்கும் முதல் தமிழ்ப்பட வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
   
 

No comments:

Post a Comment