Sunday, 30 September 2012

அஜீத்-சிம்பு இணைகிறார்கள் வரப்போகும் அதிரடி படம்


விட்டால் அஜீத் ரசிகர் மன்றத்தை மறுபடியும் சீரமைத்து அதற்கு அகில இந்திய தலைவராகிவிடுவார் போலிரு க்கிறது சிம்பு. வார்த்தைக்கு வார்த்தை அஜீத் புராணம் பாடி வரும் அவர் அடிக்கடி அஜீத்தை சந்தித்து எனர்ஜி ஏற்றிக் கொள்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். தற்போது நாம் சொல்லப்போகும் செய்திதான் ஹாட்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் முடிந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து இன்டஸ்ட்ரிக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை தரப்போகிறார்கள். அது?
இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்! பல நாட்களாக அஜீத்திடம் சிம்பு வைத்துக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனும் இதுதான். எறும்பு வாக்கிங் போனால் கல்லே டேமேஜ் ஆகும்போது அஜீத் எம்மாத்திரம்? ‘அதுக்கென்ன… செஞ்சுட்டாப்போச்சு’ என்று சொல்லிவிட்டாராம்.
தனது அடுத்த படத்தை இயக்கப் போகும் சிறுத்தை சிவாவின் காதில் இப்போதுதான் இந்த விஷயத்தை போட்டாராம் அஜீத். வெத்தலைய மெல்லலாம்னு நினைச்சா வேப்பிலையை கொடுக்குறாங்களேன்னு ஆடிப்போயிருக்கிறாராம் சிவா.

No comments:

Post a Comment