Friday, 7 September 2012

ஒரு போன் செய்த தமன்னா: வாய்ப்பை இழந்த ஹன்சிகா..!


தமன்னா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல போன் செய்துள்ளார். அதன் பிறகு நாக சைதன்யா படத்தில் நடிக்கவிருந்த ஹன்சிகாவின் வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றுவிட்டது.
ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் நடித்த வேட்டை படம் தெலுங்கில் ரீ மேக் செய்யப்படுகிறது. அதில் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, சுனில், ஆன்ட்ரியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர் என்று செய்தி வெளியானது. ஆனால் தற்போது ஹன்சிகாவுக்கு பதில் தமன்னா நடிக்கிறார். எனக்கு டேட் பிராப்லம் அதனால் தான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று ஹன்சிகா தெரிவி்த்துள்ளார்.
ஆனால் அலசி, ஆராய்ந்தபோது தான் தமன்னாவுக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தெரிய வந்தது. வேட்டை ரீமேக்கில் நாக சைதன்யா நடிக்கிறார் என்ற தகவல் அறிந்த தமன்னா ஹீரோவுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார். ஏற்கனவே 100% லவ் என்ற தெலுங்கு படத்தி்ல் நாக சைதன்யா, தமன்னா ஜோடி சேர்ந்தனர். அதிலும் ஒரு காட்சியில் பரீட்சை ஹாலில் முன் பெஞ்சில் இருக்கும் தமன்னாவின் திறந்த முதுகில் எழுதியிருக்கும் பதிலைப் பார்த்து ஹீரோ காப்பியடிப்பார். இந்த காட்சியைக் கண்டித்து ஆந்திர மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இத்தனை பிரபலமான ஜோடி தான் நாகசைதன்யாவும், தமன்னாவும். தமன்னா போன் செய்த பிறகு என்னாச்சு, ஏதாச்சுன்னு தெரியவில்லை ஹன்சிகாவின் வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றுவிட்டது.

No comments:

Post a Comment