அய்யாவழி, சந்திரமுகி உள்ளிட்ட சுஜிபாலா, நேற்று அளவுக்கதிகமாக தூக்கமாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறி நாகர்கோயிலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த இவர் ‘உண்மை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் கடந்த ஜுலை 5-ந்தேதி குமரி மாவட்டம் ஈத்தாமொழியில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தில் பிரச்சினை என்பதால்தான் சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த சுஜிபாலா நிருபர்களிடம் கூறியதாவது:
நான் தற்கொலை செய்ய முயலவில்லை. தலைவலி மற்றும் காய்ச்சலாக இருந்ததால் எனது தாயாரிடம் மாத்திரை கேட்டேன். அவர் நீயே எடுத்துக்கொள் என கூறிவிட்டார். நான் மாத்திரை தெரியாமல் பவர் கூடிய 2 மாத்திரைகளை தின்றுவிட்டேன். இதனால் மயக்கமடைந்து விழுந்தேன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டேன்.
சினிமா துறையில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கும், நடன இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்பதெல்லாம் உண்மை இல்லை. எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாகவில்லை. முடிவானதும் பத்திரிகைகள், மீடியாக்களிடம் தெரிவிப்போம். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.
நான் தற்போது டைரக்டர் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment