Monday, 6 August 2012

தன் நெருங்கிய நண்பனுடன் இணையும் பியா

தன் நெருங்கிய நண்பனுடன் இணையும் பியா தமிழ், மலையாள படங்களில் நடிக்கும் பியா, தன் நண்பர் ஷிவ் பண்டிடுடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டியிருப்பதாக கொலிவுட் பட வட்டாரம் கூறுகிறது.
கொலிவுட்டில் வெளியான “கோ” திரைப்படத்தில் நடிகை பியாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இருப்பினும் அவருக்கு கொலிவுட்டில் படவாய்ப்புகள் வராமல் இருந்த நிலையில் நீண்ட மாதங்களுக்கு பின்பு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
லீலை படத்துக்கு பிறகு, இயக்குனர் ஆண்ட்ரூ இயக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் பியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் லீலை பட நாயகன் ஷிவ் பண்டிடுடன் நடிக்க பியாவை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ.
ஷிவ் பண்டிடும் பியாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். இப்படத்தில் நடிகை பியா விரும்பியே தன் நண்பருடன் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment