மழையடிச்சும் சூடு போகல கதைதான் பார்வதி ஓமணக்குட்டனுக்கு. அஜீத்தின்பில்லா -2 படத்தில் அறிமுகமாகும் இவருக்கு அந்த படம் வெளிவருவதற்குள் ஆறேழு படங்களிலாவது நடிக்க அழைப்பு வந்திருக்க வேண்டாமா?
ஆனால் ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லையாம் எந்தக் கம்பெனியில் இருந்தும். இவர் ஏற்கனவே தமிழில் அறிமுகமான ஒரு படம் பூஜையோடு டிராப். இந்த லட்சணத்தில் இப்படியொரு புறக்கணிப்பு.
இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத பார்வதி, கோடம்பாக்கத்தில் பழம் தின்று கொட்டை போட்ட மேனேஜர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம்.
இல்லாத பனை மரத்துல ஏறி, பை கொள்ளாம திராட்சை பறிக்கிற சக்தி கனவுக்கு மட்டும்தான் இருக்கு…
No comments:
Post a Comment