30 வயதை தாண்டிய நடிகைகள், 20 வயதுக்கும் மேற்பட்ட இளம் நடிகர்களை, மது விருந்தில் இணைத்த, மும்பை தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில், நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகள் கொண்ட ஒரு கட்டடம் மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் நடத்தும் தொழிலதிபர் பிரதீப் தானே என்பவருக்கு சொந்தமானது.
வார இறுதி நாட்களில், 20 வயதுக்கு மேற்பட்ட அறிமுக இளம் நடிகர்கள், 30 வயதை தாண்டிய நடிகைகள் பங்கேற்கும், “கெட் டூ கெதர் என்ற பெயரில் மது விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.இந்த கூத்தெல்லாம் நடைபெறும் கட்டடத்திற்குள், ஒலி அலையை கட்டுப்படுத்தும் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனால், கட்டடத்திற்குள் காதை பிளக்கும் அளவுக்கு கேட்கும் சினிமா பாடல்கள் வெளியே கேட்பதில்லை.
நடிகைள் பட்டியல்: தொழிலதிபர் பிரதீப் தானே பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த மது விருந்தில், பங்கேற்ற நடிகர், நடிகைகள் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த சீனியர், “திரி ரோஸ் நடிகை, இலங்கையை பூர்வீகமாக கொண்ட, இரண்டெழுத்து நடிகை உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் யார் யாரெல்லாம் பங்கேற்றனர் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மது விருந்தில், கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை, பிரச்னை ஏற்பட்டதும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்த, செக்யூரிட்டி ஆனந்தன் என்ற அன்பழகனை போலீசார் கைது செய்தனர். மது விருந்திற்கு ஏற்பாடு செய்த மும்பை தொழிலதிபர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமாதான பேச்சு: நடிகர் மஹத்தின் கண்ணில் காயத்தை ஏற்படுத்திய, மற்றொரு நடிகர் மனோஜ், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். அவரது தந்தை ஆந்திராவில் பிரபல நடிகர் மோகன்பாபு என்பதால், இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன.
No comments:
Post a Comment