Thursday, 13 September 2012

விஷ்ணுவர்த்தனுக்கு பின் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார்??


அஜீத், இப்போது ரொம்பத்தான் மாறிப்போனார். “ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படம் என்ற பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.
“பில்லா – 2 வை முடித்த சூட்டோடு, விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்துக்கு போய்விட்டார். அஜீத்தின் கால்ஷீட் கிடைத்ததால், தலைப்பை கூட முடிவு செய்வதற்கு நேரமில்லாமல், கேமராவை தூக்கிக் கொண்டு, படப்பிடிப்புக்கு பறந்து விட்டனர்.
இதற்கிடையே, விஜயா வாஹினி நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்கவும் சம்மதித்துள்ளார். நாகிரெட்டியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் வாரிசுகளான வெங்கட் ராமரெட்டியும், பாரதி ரெட்டியும் விஜயா வாஹினி நிறுவனத்தில், ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜீத்தை அணுகி கால்ஷீட் கேட்க, உடனே, “ஓகே சொல்லியுள்ளார் அஜீத். “சிறுத்தை படத்தை இயக்கிய, சிவா தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இதில் அஜீத்துக்கு ஜோடியாக, அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

No comments:

Post a Comment