ஏற்கனவே நடித்த படங்களில் சதா மாடர்ன் டிரெஸ்சில் வந்தார். பாடல் காட்சிகளிலும் அதே உடைகளிலேயே தோன்றினார்.
புடவை உடுத்தி நடிப்பது குறித்து சதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு புடவையே அழகை தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெண்களின் உடல் அமைப்புக்கு சேலைதான் பொருத்தமானது. இது நமது கலாசார உடை ஆகும். வெளிநாடுகளில் இருந்தாலும் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலை உடுத்த நாம் மறப்பதில்லை. `மைதிலி’ படத்தின் பாடல் காட்சியில் சேலை உடுத்தி நடித்து இருக்கிறேன்.
ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடந்தது. மூன்று விதமான சேலை உடுத்தி நடனம் ஆடினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சதா தமிழில் தயாராகும் மதகஜராஜா படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மன பிரேமா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
No comments:
Post a Comment