Sunday, 9 September 2012

விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா?

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் துப்பாக்கி படம் கடைசிகட்ட படபிடிப்பில் இருக்கிறது. துப்பாக்கி படம் முடிந்ததும் இந்தியில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தியில் உருவாகவிருக்கும் படம் ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்காம்.
ஏ.ஆர்.முருக்கதாஸின் இந்தி படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதால் அந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா? எனக் கேட்ட போது ஏ.ஆர்.முருகதாஸ், ’இதுவரை சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிப்பது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.
என் கவனமெல்லாம் துப்பாக்கி படத்தை முடிப்பதில் தான் இருக்கிறது. பிரபுதேவாவின் ’ரவுடி ரத்தோர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்தார். என் படத்திலும் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக விஜய்யை நடிக்க வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment