இப்படத்தின் முன்னோட்டமும் இணையதளத்தில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
‘நீ தானே என் பொன் வசந்தம்’ படம் முதன்முறையாக இளையராஜா, கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது.
இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் பாடல்கள் கவனத்தை ஈர்த்து அனைவரின் பாராட்டுக்கும் ஆளாகியிருப்பதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், படத்தின் முன்னோட்டத்தை போல பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை குறுந்தகட்டில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே ஒரு லட்சம் குறுந்தகடு முன்பதிவு செய்யப்பட்டது.
பலரும் இந்த குறுந்தகடை பொக்கிஷம் போல கருதி பாதுக்காக்கின்றனர். பாடல்களை தரவிறக்கம் செய்வதே வழக்கமாக இருக்கும் நிலையில் குறுந்தகடை ரசிகர்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.
செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment