இந்த நேரத்தில் நாகார்ஜுனாவின் ஒரு அறிவிப்பு நயன்தாராவை குளிர வைத்திருக்கிறது. அதேநேரத்தில் இந்த அறிவிப்பு சில இளம் ஹீரோக்களை அலற வைத்திருக்கிறது என்பதும் தவிர்க்க முடியாத செய்தி. வேறொன்றுமில்லை, என்னுடைய பிறந்த நாள் அறிவிப்பு இதுதான் என்று கூறிய நாகார்ஜுனா தனது அடுத்த படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவுதான் கான்ட்ரவர்ஸி வந்தாலும் நயன்தாராவின் மொழி கடந்த வேகத்தை கண்டு விழிபிதுங்கி அதிசயப்படுகிறார்கள் சக ஹீரோயின்கள்!
அப்படியே இன்னொரு செய்தி. சமீபத்தில் சிம்பு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். லவ் பண்ணவா, வேணாமா என்று ஆரம்பிக்கிறதாம் இப்பாடலின் பல்லவி. நயன்தாராவை நினைத்து எழுதலேங்க என்று சிம்பு சொன்னாலும், நம்பவா போகுது ஊர்?.
No comments:
Post a Comment