ஆபாசப் படங்களில் நடித்த சன்னி லியோன் – டேனியல் வெப்பர் ஜோடி விரைவில் பொலிவூட்டில் இணைந்து ரசிகர்களைச் சூடேற்றப் போகின்கின்றனர்.
வெளிநாடுகளில் ஆபாசப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பொலிவூட்டில் அறிமுகமானார். இந்நிலையில் அவரது கணவரான டேனியல் வெப்பருக்கும் பொலிவூட்டில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறதாம்.
இது குறித்து சன்னி கூறுகையில்,
எனது கணவருக்கு இந்திப் பட வாய்ப்புகள் வருகின்றது. சிலர் அவரை அணுகி நாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்கக் கேட்கின்றனர். அவர் பாலிவுட்டில் நடிக்க ஆவலாக உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில் அவருக்கு இஷ்டம் தான் என்றார்.
தற்போது சன்னியின் நிறுவனமான சன் லஸ்ட் புரொடக்ஷன்ஸைக் கவனித்து வருகிறார் டேனியல். இவரும் ஆபாசப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment