விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன்,
துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன்.
இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், இன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டார் நீதிபதி.
பின்னர் இறுதி தீர்ப்பு 21ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.
ஒரு வழியாக இத்தனை நாள் வாய்தாவுக்குப் பிறகு தீர்ப்பு வரவிருப்பது துப்பாக்கி குழுவை ஆசுவாசப்படுத்தியுள்ளது. இந்த முறை வாய்தா போட்டிருந்தால் நிச்சயம் தலைப்பை ‘சரவெடி’ என மாற்றத் திட்டமிட்டிருந்தனர் துப்பாக்கி குழுவினர் என்று பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது!
No comments:
Post a Comment