Thursday, 6 September 2012

தமிழுக்கு வரும் பிபாஷாவின் பில்லி சூனிய கதை..!


பிபாஷா பாசு நடிக்கும் பில்லி சூனிய கதை தமிழில் வெளியாகிறது. 1980ல் பாலிவுட்டில் நடந்த ஒரு நடிகையின் உண்மை கதை ‘ராஸ் 3 என்ற பெயரில் இந்தியில் 3டி படமாக தயாராகிறது. அவதார் படத்தை தயாரித்த ஹாலிவுட் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ்பட் இணைந்து இதை தயாரிக்கிறார். விக்ரம் பட் இயக்குகிறார்.
ஹீரோ இம்ரான் ஹாஷ்மி, பிபாஷா பாசு, இஷா குப்தா ஹீரோயின்கள். ‘ராஸ் படத்தின் முதல்பாகம் 2003ம் ஆண்டு வெளியானது. இதில் பிபாஷா பாசு, டினோ மோரியா நடித்திருந்தனர். இதன் 2ம்பாகம் 2009ம் ஆண்டு ராஸ் 2 என்ற பெயரில் வெளியானது. இம்ரான் ஹாஷ்மி, கங்கனா ரனவத் நடித்திருந்தனர். முதல் 2 பாகம் வெற்றி பெற்றதையடுத்து 3ம் பாகம் உருவாகிறது.
திரையுலகில் கனவு கன்னியாக புகழின் உச்சியில் இருக்கும் நடிகைக்கும் அப்பட இயக்குனருக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையே மற்றொரு நடிகை குறுக்கிடுகிறார். அவருடனும் இயக்குனருக்கு காதல் பிறக்கிறது. இயக்குனரின் உதவியுடன் முன்னணி நடிகையாகிறார்.
இந்நிலையில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகையோ மார்க்கெட் இழப்பதுடன், காதலையும் இழக்கிறார். இதில் கோபம் அடைந்தவர் பில்லி சூன்யம், மந்திர வித்தைகளை பயன்படுத்தி காதல் ஜோடியை பிரிக்க முயல்கிறார். இதன் முடிவு என்ன என்பது கதை. இப்படம் தமிழிலும் ரிலீசாகிறது.

No comments:

Post a Comment