நவ்தீப்-சதா ஜோடியாக நடித்த “மைத்ரி” என்ற தெலுங்கு படம், தமிழில் “மைதிலி” என்ற பெயரில் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் சதா, அமெரிக்காவில்
“மாடலிங்” செய்பவராக நடித்து இருக்கிறார். சென்னையில் உள்ள அவருடைய நிலத்தை
சில சமூக விரோதிகள் அபகரிக்கிறார்கள். சதா, விளம்பர பட இயக்குனரான நவ்தீப்
உதவியை நாடுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
இரண்டு பேரும் இணைந்தார்களா, சதாவின் சொத்துக்கள் மீட்கப்பட்டதா? என்பதே கதை.
ஹனு சினி கிரியேஷன்ஸ் சார்பில்
ராஜேஷ்குமார் தயாரிக்க, இணை தயாரிப்பு: குமாரராஜா. படத்தின் கதை,
திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், பி.சூரியராஜன்.
நவ்தீப்-சதா ஜோடியுடன் சுமன் ஷெட்டி, பாண்டு, சுபாஷினி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்
No comments:
Post a Comment