பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் வாங்கியுள்ள புது வீட்டுக்கு சல்மான் கானும், ரன்பீர் கபூரும் சத்தமில்லாமல் சென்று வந்துள்ளனர்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் மும்பை அந்தேரி பகுதியில் டூப்ளெக்ஸ் வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் அவர் தனது குடும்பத்தாரோடு வசிக்கவிருக்கிறார். இந்த புது வீட்டுக்கு முதன்முதலாக வந்தது யார் தெரியுமா? கத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கான் தான். அதையடுத்து கத்ரீனாவின் நண்பர் ரன்பீர் கபூர் பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் இரவு 11 மணிக்கு வந்துவிட்டு 12.45 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
வீட்டைவிட்டு வெளியே வந்த ரன்பீர் பத்திரிக்கையாளர்கள் யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்று விருட்டென்று காரில் ஏறிச் சென்றுவிட்டாராம்.
கத்ரீனா தான் புது வீடு வாங்கியதை யாருக்கும் கூறாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரால் அந்த ரகசியத்தை காக்க முடியவில்லை. சல்மானுடன் சேர்ந்து அவர் நடித்த ஏக் தா டைகர் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\
No comments:
Post a Comment