Thursday, 6 September 2012

விஜய்யுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை


இளைய தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பாக்கி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இருப்பினும் தலைப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய், தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்க இசையமைக்க, பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.
விரைவில் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நடிகையின் பெயர் பற்றிய செய்திகள் இன்னும் வெளி வரவில்லை.
ஆனால் இதற்கான முயற்சியில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment