Thursday, 27 September 2012

தனுஷ் படமா ம்ம்ம் யோசிப்போம் ..!ஹன்சிகா..!


தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதை முடிவு செய்யவில்லை. அந்த படம் பற்றி யோசித்து வருகிறேன் என்றார் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா.
தொடர்ந்து ‘எங்கேயும் காதல், ‘வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ‘சிங்கம் 2, ‘சேட்டை மற்றும் தெலுங்கு படம் என 6 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் ‘சொட்டவாளகுட்டி என்ற படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது.
‘களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்குகிறார். இது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது,
‘சேட்டை படத்திற்காக தற்போது சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறேன். தமிழில் சில கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் தனுஷ் நடிக்கும் படமும் ஒன்று. 2 புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அது என்னென்ன படம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
தனுஷ் படத்தில் நடிப்பது பற்றி யோசித்து வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தபிறகு அதுபற்றி முடிவு செய்வேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே புதிய படம் பற்றி சொல்ல முடியும். 2 கதைகள் என் மனதை கவர்ந்திருக்கின்றன. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

No comments:

Post a Comment