Monday, 3 September 2012

கனடாவில் வெளியாகும் ஆதிபகவன் இசை


அமீர் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ஆதிபகவன் தற்போது இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி விட்டது.
இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் அரவாணியாக நடிப்பது சிறப்பம்சம்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அமீரின் மௌனம் பேசியதே படம் முதல் தற்போது ஆதிபகவன் வரை யுவனின் இசையே என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்பது கொலிவுட்டின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில் ஆதிபகவனின் இசை வெளியீட்டு விழாவை வரும் 29ம் திகதி கனடாவில் நடத்த அமீர் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment