வழக்கமாக ஒரு படம் வெளியாவதற்கு முன் அந்த பட போட்டோக்களை தயாரிப்பு நிறுவனம்தான் விளம்பரத்துக்காக வெளியிடும். பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் என்றால் மட்டும் அவர்கள் தங்கள் பட போட்டோக்களை டுவிட்டரில் அல்லது தங்களது வெப்சைட்டில் வெளிய¤டுவார்கள். ஆனால் தெலுங்கு படத்தில் டான்ஸ் ஆடிய படங்களை டுவிட்டரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் சார்மி.
இது பற்றி திரையுலகினர் சிலர் கூறும்போது,லட்சுமிராய்க்கும் சார்மிக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே பனிப்போர் நடக்கிறது. பெரிய படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதில் இருவரும் போட்டி போடுகின்றனர். லட்சுமிராய் வாய்ப்பை இழந்ததும் சார்மி அதை பெற்றார். உடனே டுவிட்டரில் நாகார்ஜுனாவுடன் டான்ஸ் ஆடும் படங்களை வெளியிட்டு லட்சுமிராயை கடுப்பேற்றி உள்ளார் என்றனர்.
No comments:
Post a Comment