காதல் கிசுகிசுவில் அதிகம் அடிபடுகிறார் லட்சுமிராய். இதுபோன்ற கிசுகிசுவை படிக்கும் போது, மனம் வெதும்பி, கன்னம் சிவக்கும் அளவுக்கு அழுது தீர்த்துள்ளதாக சொல்கிறார் லட்சுமிராய். “ஏதோ சுவாரசியத்துக்காக, காதல் கிசுகிசுவை கிளப்பிவிடறாங்க.
சம்பந்தப்பட்டவர்கள், எவ்வளவு வேதனைப் படுவார்கள் என, யாருமே யோசிப்பது இல்லை. கிசுகிசுவால் நான் ரொம்பவும் அப்செட் ஆகியிருக்கேன். தனி அறையில் உட்கார்ந்து, அழுது புலம்பியிருக்கேன். அழுது அழுது என் கன்னம் சிவந்தே போனது. தற்போது, பழகி விட்டது. கிசுகிசுவை படிச்சா சிரிப்பு தான் வருது. அந்தளவுக்கு பக்குவப்பட்டிருக்கேன்.
நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க நேரமும் இல்லை. நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பது, என் கொள்கை. அதனால தான், “தாண்டவம் படத்தை ஏத்துக்கிட்டேன். பாலிவுட்டில், ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கப்போறேன். அதற்காக எடையை குறைத்து, ஸ்லிம்மாக மாறுகிறேன் என்றார் லட்சுமிராய்.
No comments:
Post a Comment