Sunday, 16 September 2012

சூர்யாவுடன் ஆடுவதற்கு நயனுக்கும் ஸ்ரேயாக்கும் கடும் போட்டி!!!


சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம் 2 படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 26ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் துவங்கப்படுகிறது. இந்த படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தில் ஒரு குத்துப்பாட்டு வைத்துள்ளனராம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
அம்மணிகள் இருவருமே பிசியாக இருப்பதால் ஒரு வேளை நோ சொன்னால் அந்த வாய்ப்பு ரிச்சா கங்கோபத்யாயாவுக்கு போகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.
நயன் ஏற்கனவே ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளார். ஸ்ரேயோ இதுவரை சூர்யாவுடன் நடித்ததே இல்லை. அது தவிர குத்துப்பாட்டுக்கு அவர் ஏற்றவர் என்று சிலர் தெரிவித்தனர்.
சிங்கம் படம் தமிழில் இருந்து இந்திக்கு போய் அங்கும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment