
28 வயதான டேனியல் லாயிட் இங்கிலாந்து அழகியாகவும், கிரேட் பிரிட்டன் அழகியாகவும் முடி சூட்டப்பட்டவர். பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியுடன் பங்கேற்றவர்.
டேனியல் லாயிட்க்கு தன்னுடைய மார்பகத்தை பெருக்கி கொள்வதில் அப்படி ஒரு அலாதி பிரியம். மூன்று முறை செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்து பெரிதாக்கிய டேனியலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சிக்கல் ஏற்பட்டது. திடீரென்று மார்பகப் பகுதியில் இருந்து வலியும், வீக்கமும் ஏற்படவே மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.
அந்த பகுதியில் ரத்தம் கட்டிப்போய் புரையோடி விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து செயற்கை மார்பகத்தை எடுத்துவிட்டனர். இதனால் அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டுவிட்டது. மார்பகமும் சிறிதாகிவிட்டது.
இந்த நிலையில், மார்பகம் சிறிதான பின்னர் தற்போது நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த சிறிய மார்பகமே அழகாக இருப்பதாகவும், தனக்கு தன்னம்பிக்கை தருவதாகவும் கூறியுள்ளார் டேனியல் லாயிட்.
தற்போது காயங்கள் உள்ளதால் அதை போக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார் இந்த முன்னாள் இங்கிலாந்து அழகி.
No comments:
Post a Comment