Tuesday, 4 September 2012

இன்றைய தமிழ் சினிமா கிசுகிசுக்கள்!


விஜய இயக்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனமொன்றுக்கும் சம்பள பிரச்னை இருந்துச்சாம்…  நீண்டநாளா இழுத்துகிட்டிருந்த விவகாரம் முடிவுக்கு வராததால இயக்கங்க சங்கத்துல புகார் சொன்னாராம். அவங்க பேசி முடிச்சி ஒரு வழியா
பாக்கிய வசூல் பண்ணிகொடுத்தாங்களாம். அதுக்கு கமிஷனா 5 லகரத்த சங்கத்துக்கு இயக்கம் கொடுத்தாராம்…
ஆட்டோகிராப் இயக்கம் நட்ப மையமா வச்சி படம் எடுக்கறாராம்… இதுல நித்யமான மேன நடிகையும் நடிக்கறாராம். அவருக்கு டோலிவுட்லயும் மவுசு இருக்கறதால அந்த மொழிலயும் படத்தை எடுக்க இயக்கம் பிளான் பண்ணிருக்காராம். இதுக்காக டோலிவுட் ரைட்டர் ஒருவர பிக்ஸ் பண்ணி டயலாக் எழுத பிளான் பண்ணாராம். பாதிலேயே அவர் நழுவிட்டதாலே தன்னோட வசனங்களே அப்படியே டப் அடிக்கற டோலிவுட் ரைட்டர் யாராவது கெடப்பாங்களான்னு இயக்கம் தேடுறாராம்…
ரீ என்ட்ரி கொடுத்திருக்கற ஸ்ரீ ஹீரோயின்கிட்ட அவரோட வாரிசுகள பத்தி கேள்விகேட்டா உர்ராயிடுறாராம்… பாலிவுட்லயிருந்து சமீபத்துல மெரினா சிட்டிக்கு விசிட்டடிச்ச ஹீரோயின்கிட்ட, ‘உங்க டாட்டர் எப்ப நடிக்க வரப்போறாருனு கேள்வி கேட்டாங்களாம். ‘நான்தான் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேனே, என்னை பத்தி கேளுங்கனு சொன்னாராம். அதே கேள்வி மறுபடியும் மாத்திப்போட்டு கோலிவுட்ல டாட்டர் அறிமுகமாவாரானு கேட்டப்ப அதுலேய ஏன் குறியா இருக்கீங்க. வேற ஏதாவது கேளுங்கன்னு அனல் கக்கனாராம்…

No comments:

Post a Comment