Tuesday, 4 September 2012

எதிர்ப்பை மீறி “துப்பாக்கி” வெடிக்கும் – கஜால்

விஜய் கஜால்அகா்வால் நடித்து வரும் “துப்பாக்கி” படத்தின் அறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும் “துப்பாக்கி” படத்துக்கான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
“துப்பாக்கி” படத்தின் தலைப்பில் ஆரம்பித்த பிரச்சினை தற்போது தளபதி புகை பிடிக்கும் போஸ்ரரில் வந்து நிற்கிறது. இந்த வேளையில் கஜால்அகர்வால் அளித்துள்ள பேட்டி ரசிகா்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.
இது தொடா்பாக கஜால் கூறியதாவது
துப்பாக்கி மட்டுமின்றி எல்லா திரைப்படங்களுக்கும் பொதுவாக சர்ச்சைகள் குவிகின்றன. விஜயின் புகை பிடிக்கும் போஸ்ரருக்கு புதிதாக சர்ச்சை கிளபிபயுள்ளார்கள், ஏற்கனவே தலைப்பிலும் குழப்பம் நீடிக்கின்றது. இதையெல்லாம் மீறி ரசிகர்களின் ஆதரவுடன் “துப்பாக்கி” வெடிக்கும்.
சில தமிழ் படங்கள் என்னால் தாமதமாவதாக செய்தி பரவுகின்றது. திட்டமிட்டபடி என் படங்கள் அனைத்திலும் நடித்து முடித்துவிட்டேன். நிறைய படங்கள் கைவசம் உள்ளன. எல்லாவற்றிலும் பிசியாக நடத்துக்கொண்டு இருக்கிறேன். இந்திப் படங்களிலும் நடிக்கின்றேன்.
டாப்சி, இலியானா போன்றோருக்கும் எனக்கும் இந்திப் படங்களில் நடிப்பதால் போட்டி நிலவுவதாக பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. முத்தக்காட்சி, கவர்ச்சி போன்றவை கதையோடு சம்பந்தப்பட்டவை. கதைக்கு எப்படி வெண்டுமோ அப்படி நடிப்பேன். கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையில் மெல்லிய கொடுதான் உள்ளது. நான் ஒரு போதும் அந்த எல்லையை மீற மாட்டேன். என்றார்.

No comments:

Post a Comment