Sunday, 30 September 2012

விஜய்ன்னா டபுள் ஓகே , சூர்யான்ன வேணாம் பாஸ்

இன்றைய சினிமாவுலகில் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் , இதுதான் சரியான பழமொழி. ஆரம்பத்தில் தமிழ் படங்களில் நடத்த சமந்தா பெரிய அளவில் பேசப்படவில்லை. தெலுங்கு படவுலகில் சென்று தன கொடியை நிலை நாட்டினார். அவர் நடித்த படங்கள் சக்கை போடு போட்டன. சமீபத்தில் வெளிவந்த “நான் ஈ“, தாறுமாறாக ஓடியது, இதில் தன்னுடைய மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்திவிட்டார். முன்பெல்லாம் ஓடி ஓடி வாய்ப்பு கேட்ட சமந்தாவுக்கு இப்பொழுது வாய்புகள் குவிய ஆரம்பித்துவிட்டன. தான் யாருடன் நடிக்க வேண்டும் நடிக்க கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
தற்பொழுது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் , இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் கூடியுள்ளது. இதனால் சமந்தா ஏக பூரிப்பில் உள்ளார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகின்றது
ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்கள் அளித்த வாய்ப்பைக் கூட உதறி விட்டு, சமந்தா போனபோது. “அலர்ஜி ஆகிவிட்டது’, “கடல் காற்று ஒத்துக்கொள்ளவில்லை’. “சருமப் பிரச்னை’ என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவரைத்தேடி பெரிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் இணையும் புதிய படம்தான் அது. அதற்கு ஆம் சொன்ன சமந்தா சூர்யா நடிக்கும் லிங்குசாமியின் படத்துக்கு நோ சொன்னது தான் தற்போதைய ஹாட் நியூஸ்.

No comments:

Post a Comment