Saturday, 29 September 2012

சன்னி லியோனுக்கு வீடு தர மறுத்த மும்பைவாசிகள் ..


பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் ‘ஜிஸ்ம் 2′ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ராகினி எம்.எம்.எஸ். என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துள்ளார். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பது இல்லை என்றும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி சிறந்த நடிகையாக உருவாக வேண்டும் என்றும் திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். வாடகை வீட்டில் குடியேற முடிவு செய்து புரோக்கர்களிடம் வீடு பார்க்க சொல்லி வைத்தார். ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறி விட்டனர்.
இதனால் சன்னி லியோன் வருத்தமடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்திப் படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு வாடகைக்கு வீடு பார்த்தேன். கவர்ச்சி நடிகை என்று வீடு தர மறுக்கிறார்கள். தொடர்ந்து வீடு தேடி வருகிறேன் என்றார்.
             try to change

No comments:

Post a Comment