Tuesday, 25 September 2012

விஜயகாந்த் ஜோடியாக தமன்னா..!


தென்னிந்திய படங்களிலிருந்து பாலிவுட்டிற்கு கவனத்தை திருப்பிய தமன்னா, தமிழிலிருந்து ரீமேக் ஆகும் இந்தி படத்தில் நடிக்கிறார். ‘ஜெயம், ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ‘உனக்கும் எனக்கும், ‘வேலாயுதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ‘ஜெயம் ராஜா. இவர் விரைவில் இந்தி படத்தை இயக்குகிறார். 

2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ரமணா படத்தை ராஜா ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதில் அக்ஷய் குமார் ஹீரோ. ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் தமன்னா நடிப்பது பற்றி அவரது தந்தை பாட்டியாவிடம் கேட்டபோது, ‘ஆமாம், அக்ஷய் குமார் படத்தில் நடிப்பதுபற்றி பேச்சு நடக்கிறது. இதை ஜெயம் ராஜா இயக்க உள்ளார் என்றார்.

இயக்குனர் தரப்பில் கூறும்போது, ‘ரமணா படத்தை இயக்குனர் ராஜா இந்தியில் ரீமேக் செய்ய உள்ளது உண்மைதான். அக்ஷய் குமார் ஹீரோ. 2 முன்னணி ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சு நடக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ராஜா ஏற்கெனவே தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். அவை பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்தியிலும் அதேபோல் வரவேற்பு பெறுவார். இப்படத்தை, ரவுடி ரத்தோர் படத்தையடுத்து சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment