Thursday, 27 September 2012

அடக்க ஒடுக்க நடிகைகளின் அதிரடி முடிவு


அடக்க ஒடுக்கத்தை வச்சுகிட்டு கர்சீப் கூட வாங்க முடியாது என்று முடிவுக்குவந்திருக்கிறார்கள் இரண்டு நடிகைகள். அதனால் கர்சீப்பை கொடுத்தால் கூட கட்டிக் கொள்கிற முடிவுக்கு கூட வரத்துணிந்த இவர்களை நினைத்தால் ஐயோ பாவமாகதான் இருக்கிறது. நாம் சொல்லப் போகும் அந்த இருவர், ரம்யா நம்பீசனும், விஜயலட்சுமியும்தான்.
பீட்சா படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம் ரம்யா நம்பீசன். நான் ஒரு நாளும் கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு சொன்னதே இல்லைங்க. என்னவோ அவங்களே என்னோட துணிய உருவல என்று அலுத்துக் கொள்வது ரம்யா என்றால், விஜயலட்சுமியின் கதையே வேறு.
தமிழ் படம் என்ற படத்தை இயக்கிய அமுதனின் ரெண்டாவது படம்தான் ‘ரெண்டாவது படம்’ (வார்த்தையை அமைப்பதற்கு இம்சை கொடுக்கிற மாதிரியே டைட்டில் வைக்கிறீங்களேப்பா…) இந்த படத்தில் நடிக்க விஜயலட்சுமியை அழைத்தாராம்.
அவர் வந்த தோரணையும், திமிரும் ஏன் இந்த பொண்ணை கவர்ச்சியா நடிக்க வைக்கக் கூடாதுன்னு அவர் மனதில் தோன்ற, (பொண்ணுன்னா இப்படிதான் பேரெடுக்கணும்) கவர்சியா நடிக்கிறீயாம்மா என்றாராம். அதுக்கென்ன… செஞ்சுட்டா போச்சு என்று விஜி சொல்ல, காஸ்ட்யூமருக்கு பெருமளவு நூல் செலவு மிச்சமாகிவிட்டதாம்.
ஹஹ்ஹ்ம்ம்ம்.. பார்த்துட்டு சொல்றோம்.

No comments:

Post a Comment