Wednesday, 19 September 2012

கேத்தின் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொலிசார்

பிரான்சிற்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் அரை நிர்வாண புகைப்படங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு பத்திரிக்கைக்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை மீறினால் குளேசர் பத்திரிக்கைக்கு தக்க தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என நேற்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.00மணிக்கு குளேசர் பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்தை பிரான்ஸ் பொலிசார் முற்றுகையிட்டனர்.
கேத் தொடர்பான புகைப்படங்கள், அதன் நகல், புகைப்படம் எடுக்க பயன்படுத்திய கருவி, மற்றும் அச்சிடப்பட்டிருந்த இதழ்கள் அனைத்தையும் கைப்பற்றினர்.
மேலும் கணனியில் வில்லியம் மனைலி கேத் தொடர்பான புகைப்படம் மற்றும் தகவல்களையும், குறுந்தகடுகளையும் முற்றிலும் கைப்பற்றியுள்ளனர்.
எந்தவித் உள்நோக்கமும், பழிவாங்கும் நடவடிக்கையுடனும் இப்புகைப்படம் வெளியிடப்படவில்லை என குளேசர் பத்திரிக்கையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment