Sunday, 9 September 2012

கார் விபத்தில் நடிகை பிந்து மாதவிக்கு கையில் காயம்!


கேடி பில்லா கில்லாடி ரங்கா படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்புகையில் நடிகை பிந்து மாதவியின் கார் மற்றொரு காரின் மீது மோதியது.
கொலிவுட்டில் வெப்பம், கழுகு படங்களில் நடித்த பிந்து, தற்போது சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து வருகின்றார்.
பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வருகின்றது.
திருச்சியில் நடந்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்புகையில் பிந்து மாதவி வந்த கார் மற்றொரு காரின் மீது மோதியது.
இதில் பிந்து மாதவிக்கு கை முறிவு ஏற்பட்டது. அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள தொடங்கி விட்டார்.
இவ்விபத்து குறித்து பிந்து மாதவி, கை விரல்களை அசைக்க முடியவில்லை. உதவியாளர் மூலம்தான் சாப்பிடுகின்றேன்.
வலி ஏற்படாமல் இருக்க மருந்து சாப்பிட்டு விட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment