கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட விழா ஒன்றில் கலந்துகொள்ள சொல்லி அழைப்பு போனது இவருக்கு. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். புயல் அதை தவறவிடாது. அந்த விழாவில் கலந்து கொண்டு அம்மாவிடம் நெடுஞ்சாண்கிடை ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் என்றுதான் இன்டஸ்ட்ரி நினைத்தது. ஆனால் முட்டு சந்தில் சிக்கிக் கொள்வதுதான் அவரது ஜென்ம ராசியாயிற்றே. யாருடைய அட்வைசையோ கேட்டு மறுபடியும் முரண்டு பிடித்தார் அவர். நிகழ்ச்சி நடந்த நாளன்று புயல் மதுரையில் மையம் கொண்டிருந்தது.
இதை தொடர்ந்து போனிலும், நேரிலும் அவரை அட்வைஸ் செய்ய ஆரம்பித்த சுற்றமும் நட்பும், ‘நீ செஞ்சதுதான் ரைட்’ என்றும், ‘தப்பு பண்ணிட்டீயே தம்பி’ என்றும் மாறி மாறி குழப்பித்தள்ள, ஈ-க்கு தப்பிய சுதீர் போலாகிவிட்டார் மனுஷன்.
எல்லாம் வாஸ்து கோளாறு என்றும் புத்தி சொல்லப்பட்டதாம் அவருக்கு. கடைசியாக அதை நம்பிய வடிவேலு தனது சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர முடிவு செய்திருக்கிறார். விவேக் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு தயாராகிக் கொண்டிருக்கிறதாம் வைகைப்புயலுக்கு.
சேவலை கூடையில் கவுக்கலாம். சிங்கத்தை முடியுமா? நகைச்சுவை சிங்கமே… கூண்டு திறந்தேதான் கிடக்கு. வெளியே வா!
No comments:
Post a Comment