Friday, 14 September 2012

தயாரிப்பாளர் திடீர் மரணம்: கடும் அதிர்ச்சியில் நடிகை காம்னா!


மச்சக்காரன், இதயத்திருடன் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி. கவர்ச்சிகரமாக நடித்தபோதிலும், ஏனோ இவரது நடிப்புக்கு கோலிவுட்டில் மவுசு இல்லாமல் இருந்தது.
அதனால் சரியான வாய்ப்பு இல்லாமல் திருமலை இயக்கிய காசேதான் கடவுளடா என்ற படத்தில் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்த காம்னா, மீண்டும் சினம் கொண்டான் என்ற படத்திலும் புதுமுக நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் திடீரென இறந்து விட்டதால், அந்த பட வேலைகளை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே முன்வரிசை நடிகர்களின் படவாய்ப்புகளை கேட்ச் பண்ணி விடலாம் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த காம்னா, தற்போது கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

No comments:

Post a Comment