நடிகை பிரியாமணி சாருலதா என்ற படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் இப்படம் தயாராகியுள்ளது. வருகிற 20-ந்தேதி தமிழ் நாடு, ஆந்திராவில் இப்படம் ரிலீசாகிறது. அதே நாளில் தெலுங்கு, கன்னடத்தில் டப்பிங் செய்தும் வெளியிடுகின்றனர்.
இரட்டை வேடத்தில் வரும் முதல் படம் என்பதால் இதற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொன்குமரன் இயக்கியுள்ளார். தாய்லாந்து படமான அலோன் என்ற படத்தின் ரீமேக்கே சாருலதா. இந்த படம் குறித்து பெங்களூரில் பிரியாமணி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம் சாருலதா, ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சாருலதா கதை அற்புதமானது. என்னை மிகவும் கவர்ந்தது. இதில் நடிக்க வாய்ப்பு வந்த உடனேயே தயக்கம் காட்டாமல் உடனே ஒப்புக் கொண்டேன். திரையுலக வாழ்க்கையில் நான் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாருலதா படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு கூறும் போது இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்றார்.
No comments:
Post a Comment