Monday, 20 August 2012

யோகாவால் நல்ல ‘ஷேப்’புக்கு வந்த ‘ஸ்பைஸ் கேர்ள்’ ஜெரி ஹாலிவெல்!


தீவிர யோகா, நல்ல உடற்பயிற்சி உள்ளிட்டவற்றால் தற்போது பழைய பொலிவுக்குத் தான் திரும்பியுள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஸ்பைஸ் கேர்ள் குழுவைச் சேர்ந்த ஜெரி ஹாலிவெல் கூறியுள்ளார்.
தனது பழைய பொலிவு தனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாக இருப்பதாகவும் அவர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
இவருக்கு ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவில் ஜிஞ்சர் அதாவது இஞ்சி என்று செல்லப் பெயர் உண்டு. 2012 லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது நிகழ்ச்சியைக் கொடுத்த ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்த இந்த இஞ்சி அழகி, அழகான உடையுடன் அட்டகாசமான டான்ஸைப் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். இவ்வளவு ஸ்லிம்மாக மாறி விட்டாரே என்று அனைவரும் ஜெரியைப் பார்த்து வாய் பிளந்தனர்.
அவரது இந்த புதிய பொலிவுக்கு யோகாதான் முக்கிய காரணமாம். அதேபோல ஆரோக்கியமான சாப்பாடு, உடலுக்கேற்ற ஆடைகள் ஆகியவையும் கூட ஜெரியின் அழகுக்கு முக்கியக் காரணங்களாக கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment