Monday, 20 August 2012

இளம் வயதில் திருமணம் தப்பில்லை! மிலி சைரஸ்

பிரபல நடிகையும், பாப் பாடகியுமான மிலி சைரசுக்கு, 19 வயது தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இவருக்கு திருமண ஆசை வந்து விட்டது. “ஹோம் அன்ட் அவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த, சக நடிகர் லைம் ஹோம்ஸ்வொர்த்துடன், இவருக்கு தீவிர காதல். இருவரும் ஜோடியாக, அமெரிக்கா, பிரிட்டன் என, உற்சாகத்துடன் வலம் வருகின்றனர். காதலிக்க துவங்கிய, ஒரு சில மாதங்களிலேயே, இவர்கள் இருவருக்கும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது. “ஏன், இந்த இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறீர்கள்? எனக் @கட்கும் பத்திரிகையாளர்களிடம், “சார்… வாழ்க்கை ரொம்பவும் குறுகியது. அதற்குள், நாம் என்னென்ன ஆசைப்படுகிறோமோ, அவை அத்தனையையும் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். அதை விடுங்கள், திருமண நிச்சயதார்த்தத்துக்கு, லைம் ஹோம்ஸ் வொர்த், வைர மோதிரத்தை எனக்கு பரிசளித்தார். எத்தனை அழகாக இருக்கிறது தெரியுமா?, என, பூரிப்புடன் கூறினார் மிலி. இவரின் முகத்தில், இப்போதே கல்யாண களை வந்து விட்டது.

No comments:

Post a Comment