Tuesday, 28 August 2012
இன்றைய கோடம்பாக்கம் கிசு கிசு..!
#பிரபு தேவா இயக்கும் இந்தி படத்தில் ஸ்ருதி ஹாசன் அண்ணனாக நடிக்கிறார் வில்லன் நடிகர் சோனு சூட்.
#‘அம்மாவின் கைபேசி படத்துக்காக வரிகளே இடம்பெறாமல் ரோஹித் குல்கர்னியின் இசையை வைத்தே பாடல் காட்சியை போன்று படமாக்க உள்ளாராம் தங்கர்பச்சான்.
#சந்திரா பட ஷூட்டிங்கிற்காக நியூயார்க் செல்லும் ஸ்ரேயா அங்கிருந்து டொரன்டோ சென்று திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். பிறகு ஜப்பான் சென்று ‘சிவாஜி 3டி படம் பார்க்க உள்ளார்.
#அழகு கிரீம்களை தடவினால் வெள்ளை ஆகலாம் என்று சொல்வது உண்மையென்றால் காலம் காலமாக அதை பயன்படுத்தும் மக்களின் முகம் இந்நேரம் வெள்ளை அடித்ததுபோல் மாறியிருக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி மாறவில்லை என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு.
#சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மாதவனின் 7வயது மகன், கிப்டுக்கு பதிலாக தனது நண்பர்களிடம் நன்கொடை வசூலித்து விலங்குகள் சிகிச்சைக்கான நிதியாக அதை அளித்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment