Sunday, 26 August 2012

நான் கர்ப்பமானதற்கு இத்தாலியின் முன்னாள் பிரதமர் தான் காரணம்: மொடல் அழகி பரபரப்பு புகார்

முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியால் தான் நான் கர்ப்பமானேன் என்று மொடல் அழகியும், டிவி நடிகையுமான சபீனா பேகன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு பணத்தை முறைகேடாக இளம்பெண்களுக்கு வாரி வழங்கியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. மேலும் டீன் ஏஜ் சிறுமிகளுடனும், விபசார பெண்கள் பலருடனும் ஒரே நேரத்தில் அவர் உல்லாசமாக இருந்தாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன் ஆதாரங்களை மறைக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் மாபியா கும்பலுடன் தொடர்பு, வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, அரசு பணத்தை முறைகேடு செய்தது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைகளும் நடந்தன. இதையடுத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் அவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சில்வியோவால் கருவுற்றேன் என்று மொடல் அழகியும், டிவி நடிகையுமான சபீனா பேகன்(வயது 38) இத்தாலி பத்திரிகைக்கும் இணையத்தளங்களுக்கும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் கர்ப்பமானதற்கு காரணம் சில்வியோ தான் என்பது நன்றாக தெரியும். ஏனெனில் நான் அவருடன் மட்டும் தான் தனியாக படுக்கையில் தங்கியிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக கரு கலைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால் சில்வியோவுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment