Monday, 6 August 2012

எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்கிறார் வரலட்சுமி


புரட்சித்தளபதி விஷால் நடிக்கும் எம்.ஜி.ஆர்(மத கஜா ராஜா) படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக நடிக்க உள்ளார்.
சுந்தர்.சி இயக்கும் இப்படத்திற்கான நாயகிகள் தெரிவில் தொடக்கத்திலிருந்தே குழப்பங்கள் நிலவி வருகின்றது.
தொடக்கத்தில் “கோ” நாயகி கார்த்திகாவை ஒப்பந்தம் செய்தனர். அவர் என்னிடம் சொன்ன கதை வேறு, படத்தின் கதை வேறாக உள்ளது என புகார் கூறி விலகினார்.
பின்பு, டாப்ஸி வந்து சேர, திடீரென விஷாலுடன் நடிக்க விருப்பமில்லை எனக்கூறி படத்திலிருந்து விலகி விட்டார்.
இந்நிலையில் வரலட்சுமியை சுந்தர்.சி ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொலிவுட்டில் விஷால்-வரலட்சுமி காதலிக்கிறார்கள் என்ற ஒரு தகவல் உலாவி வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.
மேலும் கொலிவுட்டில் சிம்புவுடன் வரலட்சுமி போடா போடியில் நடித்தாலும் அப்படம் இன்னும் வெளியாகி வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment