Tuesday, 21 August 2012

சமந்தா மீது குளோசப் பார்வை!

மும்பை மோகினி சமந்தா, ஏற்கனவே, “மாஸ்கோவின் காவிரி, “பாணா காத்தாடி படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் பப்படமானதால் சமந்தா மீது, “ராசியில்லாத நடிகை என்கிற முத்திரை குத்தப்பட்டது. இதற்கு நடுவே, மணிரத்தினத்தின், “கடல் கவுதம் மேனனின், “நீ தானே என் பொன் வசந்தம் படங்களில் ஒப்பந்தமானார். அப்போது, சமந்தா மீது ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் மணிரத்னத்தோடு மல்லுக்கட்டி, “கடல் படத்திலிருந்து விலகியதும், கவுதம் மேனனோடு காரசார வாக்குவாதம் நடத்தியதும், சமந்தா மீது இருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது. இப்போது, “நான் ஈ படம் ஹிட்டாகியிருப்பதால் சமந்தா மீது கோடம்பாக்கத்தின் குளோசப் பார்வை விழுந்திருக்கிறது. எனவே மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழியிலேயே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம், சமந்தா.

No comments:

Post a Comment