Monday, 6 August 2012

தான் வெளியிட்ட புகைப்படங்களால் தனக்கு வந்த வினை … மல்லிகா கவலை (புகைப்படம் இணைப்பு )


கேன்ஸ் பட விழாவில் பங்கேற்ற மல்லிகா ஷெராவத், விழா தொடர்பான தன்னுடைய புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் வெளிநாட்டு தொழில் அதிபர் டோமினிக் டெஸிக்வுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இது மல்லிகாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மல்லிகா ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும் அதற்கான செலவை டோமினிக்தான் ஏற்கிறார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று பேச்சு எழுந்துள்ளது.

இதுபற்றி கேள்விப்பட்ட மல்லிகாவுக்கு கோபம் தலைக்கேறியது. அவர் கூறும் போது, இது சரியான கேலிகூத்து. என்னை ஸ்பான்ஸர் செய்வதற்கு இன்னொரு ஆள் தேவை இல்லை.

டோமினிக்கின் சொந்த விமானத்தில் நானும், எனது சகோதரரும் வெளிநாடு சென்றதை விமர்சிப்பதும் எனக்கு எதிரானவர்கள் செய்யும் வேலைதான். அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment