Tuesday, 31 July 2012

ஆர்யாவுக்கு உள்ள பிரச்சினை என்ன


பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற டெல்லி பெல்லி படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு தகுந்த மாதிரி ‘சேட்டை’யாக எடுத்து வருகிறார் இயக்குனர் கண்ணன்.
இதில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்ஷிகா, அஞ்சலி ஆகியோர் ரகளையான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா மொத்வானி நடிக்கிறார். இவர் தமிழ் பத்திரிக்கை நிருபராக வருகின்றார்.
இவருடன் சந்தானம் புகைப்பட நிருபராகவும், பிரேம்ஜி கார்டூனிஸ்ட் நிருபராகவும் வருகிறார். ஆங்கில பத்திரிக்கையாளராக அஞ்சலியும் நடித்துள்ளார்கள்.
சேட்டை படத்தில் ஆர்யாவுக்கு உள்ள பிரச்சினை என்ன? அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? என்பதையும் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் பண்ணும் ரகளையை கலகலப்பாக படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று ‘சேட்டை’ பட இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment