உலகநாயகனா… இளையதளபதியா என்ற போட்டி நேரடியாக ஆக்ஸ்ட் மாதம் களத்தில் பரீட்சிக்கப்பட இருக்கின்றது.
தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படங்களாக துப்பாக்கியும், விஸ்வரூபமும் பேசப்படுகின்றன.
நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் ட்ரெய்லர் ரெடியான நிலையில் தலைப்பு தொடர்பான பிரச்சினையில் இழுபட்டுக்கொண்டு இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 1 க்கு தலைப்பு தொடர்பான வழக்கில் துப்பாக்கிக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
தீர்ப்பு சாதகமாக அமையும் பட்சத்தில் ஆகஸ்டு 15-ஆம் தேதி துப்பாக்கி திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்புடன் படக்குழு இருப்பதாக தெரிகிறது.
இதே நேரம் ஆகஸ்டு மாதம் கமல் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படமும் ரிலீசாக இருக்கிறது.
ஜெயிக்கப்போவது கமலா, இளையதளபதியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..!
No comments:
Post a Comment