இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய 29வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
2002ம் ஆண்டில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அண்ணன், இயக்குனர் செல்வராகவன் தனுஷை அறிமுகப்படுத்தினார்.
2002ம் ஆண்டில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அண்ணன், இயக்குனர் செல்வராகவன் தனுஷை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் நடித்த காதல் கொண்டேன் படம் அவருக்கென்று நன்மதிப்பை உருவாக்கி தந்தது.
இதற்கிடையே நடிகர் சிம்புவுக்கும் தனுசுக்கும் சினிமா துறையில் போட்டிகள் பல நிலவுவதாக தகவல்கள் தொடக்கம் முதல் வெளிவந்தாலும் கடந்த சில நாட்களாக இதை இவர்கள் மறுத்து வருகின்றனர்.
அதற்கு சிறந்த உதாரணம், துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்பட விழா சைமாவில் இருவரும் தங்களுடைய நட்பை பரிமாறிக்கொண்டார்கள்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ், நேற்று விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் ராதிகா, பிரேம்ஜி அமரன், தனுஷின் பள்ளித்தோழிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு தனுஷை வாழ்த்தியது அவர்களது நட்பை மென்மேலும் திரையுலகிற்கு வெளிப்படுத்தும் விடயமாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment