இளையதளபதி விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் முதல் பாகம் பிரிட்டனில் உருவாக உள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் ‘யோஹன்’ படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகையொருவரை படக்குழுவினர் தேடி வருகின்றார்கள்.
யோஹன் என்ற பெயர் சர்வதேச அளவில் உள்ள பெயர் என்பதாலும் படத்தின் கதைப்படி விஜய் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார் என்பதாலும் படம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாக உள்ளது.
கதாநாயகி தவிர, வெளிநாட்டில் நடைபெறுவது போல கதை இருப்பதால் படத்தில் நடிக்க வெளிநாட்டு நடிகர், நடிகைகளிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் யோஹன் படம் பல்வேறு பாகங்கள் அடங்கியது என்பதால் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யோஹன் முதல் பாகம் பிரிட்டனில் தயாராக இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment