லிண்ட்ஸே லோகனுக்கு 25 வயதுதான் ஆகிறது. இந்தியாவில் இது இரண்டும்கெட்டான் வயது. ஹாலிவுட் நடிகையைப் பொறுத்தவரை கரைகண்ட வயது.
லிண்ட்ஸே லோகனின் இதுவரையான சரித்திரம் அவரை கரை கண்டவராகவே காண்பிக்கும். ஆனாலும் அவரும் பெண்தானே.
தி கேன்யன்ஸ் என்ற படத்தில் நடிக்க லிண்ட்ஸே ஒப்புக் கொண்டுள்ளார். ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் வாய் மொழி உத்தரவாதம் மட்டுமே.
முறையான ஒப்பந்தம் இன்னும் இரு வாரங்களில் கையெழுத்தாகிறது. இந்நிலையில் அவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதா என்று பெருத்த சந்தேகம்.
இந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடிக்க வேண்டும். ப்ளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்திருந்தாலும் அது பத்திரிகை. இது சினிமா.
இரண்டாவது அவருடன் நடிப்பவர் ஒரு ப்ளூஃபிலிம் நடிகர். இவ்வளவு கான்ட்ரவர்ஸி உள்ள படத்தை லிண்ட்ஸே கன்சிடர் செய்ய காரணம், படத்தை இயக்குகிறவர் ராகிங் புல், டாக்சி ட்ரைவர் போன்ற ஹாலிவுட்டின் முக்கிய படங்களின் கதாசிரியர் பால் ஷ்ரேடர்.
படத்தின் கதை பிடித்திருப்பதால் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார் லிண்ட்ஸே. ஜுலையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

No comments:
Post a Comment