
இரண்டாவது நாயகியாகவே தொடர்ந்து நடிப்பதில் வருத்தமா என்றதற்கு பதில் அளித்தார் பியா. கோவா, பொய் சொல்லப்போறோம், கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா.
அவர் கூறியதாவது: சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அது முக்கியத்துவம் உள்ள வேடமாக இருந்தால் நடிக்க மறுப்பதில்லை.
மாஸ்டர் படத்தில் தக்ஷா, கோ படத்தில் சரோ போன்ற கதாபாத்திரங்கள் 2வது ஹீரோயின் வேடங்கள்தான். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்க தயங்கமாட்டேன். கவர்ச்சி காட்டாமல் நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள்.
அதுபோல் வேடங்களை கொடுத்தால் சந்தோஷப்படுவேன். அப்போதுதான் கவர்ச்சி ஹீரோயின் என்று என் மீது குத்தப்பட்ட முத்திரை மாறும். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்தாலும் வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க தயார். அதற்காக காத்திருப்பேன்.
கோ படம் எனக்கு திருப்பு முனை. விஜய் இயக்கத்தில் எனது அறிமுகப்படம் பொய் சொல்லப்போறோம் மற்றும் ராஜு சுந்தரம் இயக்கிய ஏகன் படங்கள் எனக்கு பெயர் பெற்றுத்தந்தது. தற்போது தோழன் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது. இவ்வாறு பியா கூறினார்.
No comments:
Post a Comment